காணி நிலம் வேண்டும்.... அயர்ந்துறங்க அதிலோர் அழகிய வீடு வேண்டும்.... அனைவரின் கனவும் இதுவே. பெருநோய் ( Pandemic ) தொற்றினால் அருகி வரும் பொருளாதார சூழலில் சாத்தியமா இது... இறுதி வரை கனவுதானோ என்றே நம்மில் பலர் மறுகி வருகின்றோம். நம் அனைவரின் வீடு கட்டும் ஆசையும் நமது பொருளாதார வரம்புக்குள் அடங்கி வர தற்போதய விலையேற்றத்தில், ஆட்களின் சாம்பள ஏற்றத்தில் கட்டுகடங்கா கட்டுமான பொருள் விலை ஏற்றத்தில் எவ்வளவு சாத்தியம் என்று நினைக்கும் போதே தலை கிறுகிறுக்கிறது. ஆனால் நமக்கோர் வீடு கனவு, நமது பட்ஜெட்டில் எளிதில் சாத்தியமே. எவ்வாறு? அறிவியலின் அசாத்திய கண்டு பிடிப்புகள் ( Science Inventions ) மனிதனின் வாழ்வியல் மேம்பட பலவாறும் துணை நிற்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கட்டிட கலையிலும் அது நிரூபணம். அவ்வாறு அறிவியலின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதுதான் இண்டெர்லாக் ப்ளாக் (INTERLOCK BLOCK) இதில் கட்டுமானம் எளிதாக முடிந்து விடுகிறது. இதன் உறுதி சாதாரண செங்கல்லை விட 10 மடங்கு அதிகம் என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. சிமெண்ட், மணல் ஆகிய கட்ட...